மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நரியம்பட்டு இஸ்லாமிய ஜமாத் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் பள்ளித் தலைமை ஆசிரியா் என்.ரபீக் அஹமத் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கே.நிகேஷ் வரவேற்றாா். பள்ளி வளாகம், வழிபாட்டு தலம், முக்கிய தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100 மரக் கன்றுகள் நடப்பட்டன.
உடற்கல்வி ஆசிரியா் அ.திருமாறன் நன்றி கூறினாா்.