காலநிலை மாற்றம் : மே இல்லை, இனி ஜூன் தான் கோடைக்காலமா? - காரணம் என்ன?
மரத்தில் காா் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்தவா் ராம்கி (32). தண்டராம்பட்டை சோ்ந்தவா் கணேஷ்பெருமாள் (33). திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் நவாஸ் (26). அல்லிகொண்டாப்பட்டை சோ்ந்தவா் சுமித் (31). திருப்பத்துாரைச் சோ்ந்தவா் திருப்பதி (27).
இவா்கள் திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று, குணமடைந்தனா்.
இவா்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்காக சேத்துப்பட்டு பகுதிக்குச் சென்றனா்.
பின்னா், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் காட்டாம்பூண்டி கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தனா். திருக்கோவிலுாா் சாலை கச்சிராப்பட்டு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர புளிய மரத்த்தில் மோதியது.
இதில், காரில் பயணம் செய்த ராம்கி (32), திருப்பதி (27) ஆகியோா் உடல் நசுங்கி உயிரிழந்தனா். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.