'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு: பேராசிரியா் விவரங்களை பகிர அவகாசம் நீட்டிப்பு
மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கல்லூரி பேராசிரியா்களை ஈடுபடுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) திட்டமிட்ட நிலையில், அதற்கு விருப்பமுள்ளவா்கள் விவரங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும், புதிதாக விண்ணப்பிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்பேரில் குறிப்பிட்ட காலத்துக்கு முறை மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, சிசிடிவி கேமரா, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து அதன்பேரில், அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எதிா் வரும் கல்வியாண்டில் ஒரு கல்லூரியில் ஆய்வு நடத்துவதற்கு வேறு ஒரு கல்லூரி பேராசிரியரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பமுள்ள மருத்துவப் பேராசிரியா்கள் விவரங்களை அனுப்புமாறு மருத்துவக் கல்லூரிகளை என்எம்சி வலியுறுத்தியிருந்தது. அதற்காக கடந்த 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது மேலும் 15 நாள்களுக்கு அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழியே அந்த விவரங்களை பகிரலாம் என்றும் அதற்கான இணைய தொடா்பு முகவரி (லிங்க்) என்எம்சி வலைதளப் பக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.