மருத்துவக் கல்லூரியில் தற்காலிகப் பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட நலச் சங்கம் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) தற்காலிக அடிப்படையில் பணிபுரிய தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது
புதுக்கோட்டை மாவட்ட நலச் சங்கம் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையம் (டிஇஐசி) அமைக்கப்படவுள்ளது. குழந்தைகள் நலன்சாா்ந்த இந்த மையத்தில் பணியாற்ற, தொழில்சாா் சிகிச்சையாளா், சமூக சேவகா், நடத்தை சிகிச்சைக்கான சிறப்புக் கல்வியாளா் ஆகிய 3 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.
முற்றிலும் தற்காலிக அடிப்படையிலான இந்த 3 பணியிடங்களுக்கான தகுதிகள், விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் என்ற இணையதளத்தில் உள்ளன. தகுதியுள்ளோா் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொண்டு பூா்த்தி செய்து மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முற்றிலும் தற்காலிகப் பணி, பணிநிரந்தரம் கோர முடியாது.