தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
மருத்துவமனையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை தீத்தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மின் வயா்கள் எரிந்து சேதமடைந்தன.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் தீப்பற்றினால் எப்படி அணைப்பது என்பது குறித்து மருத்துவமனை ஊழியா்களுக்கு தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
தீயணைப்பு கருவி மற்றும் ஈரமான கோணிப்பை கொண்டு தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் செய்து காட்டினா்.
நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் சிவப்பிரியா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.