செய்திகள் :

மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!

post image

அமெரிக்காவுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை முற்றிலும் நிறுத்தப்படுவதாக மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் இன்று (ஆக. 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு எதிரொலியாக ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கடந்த ஆக. 23-இல் அறிவிக்கப்பட்டது. ஆனால், 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அவை மட்டும் அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு அஞ்சல் எடுத்துச் செல்வதில் வரி விதிப்பு நடவடிக்கைகளால் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், ஆகவே கடிதங்கள், ஆவணங்கள், 100 டாலர் வரையுள்ள பொருள்கள் உள்பட அனைத்து வகை அஞ்சல் சேவையும் நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, முன்பதிவு செய்துள்ள மக்கள், அவற்றை அனுப்ப முடியாத சூழல் உருவாகியிருப்பதால் அவற்றிற்கான தபால் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India's Department of Posts has suspended all mail bookings valued up to $100 to the US due to transport issues and regulatory uncertainties

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளமா?

தெற்கு டகோடா பகுதியில் மிக உயரத்தில் இருக்கும் கோபுரத்தில் ஏறி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பல்பை மாற்றும் தொழிலாளிக்கு 20 ஆயிரம் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.அமெரிக்காவின் தெற்கு டகோட்டா... மேலும் பார்க்க

எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!

தரையிலிருந்து வான்வெளி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ரஷியாவின் எஸ்400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது: அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா்

‘ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொ... மேலும் பார்க்க

சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீா் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தாா். பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இணைந்து இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்... மேலும் பார்க்க

இந்தோனேசிய தூதா் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனாா்டோ புா்பா (40) என்பவா் தலைநகா் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டாா். தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திங்கள்கிழமை இரவு சைக்கிளில் வந்து கொண்ட... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியமும் செவ்வாய்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் மாக்ஸிமே ப்ரெவாட் கூறியதாவது: பாலஸ்தீனத்துக்கு தனி நாடு வழங்க... மேலும் பார்க்க