மறைந்த பாடகர் எஸ்பிபி பெயரில் சாலை: துணை முதல்வர் திறந்து வைத்தார்!
சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் வீட்டுக்குச் செல்லும் சாலைக்கு அன்னாரது பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த சாலைக்கான பெயர்ப்பலகை புதியதாக நிறுவப்பட்டு அதில் ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(பிப். 11) திறந்து வைத்தார்.