மறைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவின் தந்தை தற்கொலை - அதிர்ச்சி
மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் இன்று காலை திடீர் மரணமடைந்திருக்கிறார். வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆங்கராக அறிமுகமாகி பிறகு ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலான பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் சித்ரா. சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து டிவியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் கடந்த கடந்த 2020 ம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் நசரத் பேட்டையில் ஹோட்டல் ஒன்றில் திடீர் மரணமடைந்தார்.
தற்கொலை செய்து கொண்டதாகவும் இவரது மரணத்துக்குக் காரணம் இவரது கணவர் ஹேமந்த்தான் எனவும் சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். ஹேமந்தும் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கு நடந்து முடிவில் ஹேமந்த் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பு வந்தது.
தீர்ப்பை எதிர்த்து சித்ராவின் பெற்றோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அந்த வழக்கு நிலுவையில் இருக்கிற நிலையில், இன்று அதிகாலை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே சித்ராவின் மரணத்திலிருந்தே வயிற்று வலி முதலான உடல் சார்ந்த பிரச்னைகள் ஒருபுறம் படுத்த, மகள் வழக்கு விவகாரமும் சேர்ந்து அழுத்த, கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்திலிருந்தார் என்கிறார்கள் சித்ராவின் உறவினர்கள். இந்த விவகாரத்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.