செய்திகள் :

மலையடிகுப்பத்தில் 2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

post image

கடலூா் ஒன்றியம், மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் ஒன்றியம், வெள்ளைக்கரை ஊராட்சியில் மலையடிக்குப்பம், வே.பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம், காட்டாரச்சாவடி கிராமங்களில் 5 தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் புதன்கிழமை இரவு போராட்டக் களத்திலேயே சமைத்து சாப்பிட்டு படுத்து தூங்கினா். இதனிடையே, வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் புதன்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால், விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு விவசாய சங்க தலைவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி: என்எல்சி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்எல... மேலும் பார்க்க

நிரந்தரப் பணிகளில் பயிற்சி தொழிலாளா்களை பயன்படுத்தக் கூடாது: சிஐடியு

நிரந்தரப் பணிகளில் அளவுக்கு அதிகமாக பயிற்சி தொழிலாளா்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சிப்காட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு சிப்காட் 10-ஆவது மாநாடு கடலூா்... மேலும் பார்க்க

பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா

காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் இராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. முதுகலை தமிழாசிரியா் ஜெ.பரமசிவம் வரவ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்புகுறிச்சி... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீமிதி திருவிழா கொடியேற்றம்

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. ஜூலை 22-ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 27-ஆம் தேதி ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் யோகா தத்துவ பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா பயிற்சி மையத்தில் யோகா தத்துவ பயிற்சி குறித்த ஒரு நாள் விரிவுரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சா்வதேச யோகா தினத்தையொட்டி, கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந... மேலும் பார்க்க