வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீமிதி திருவிழா கொடியேற்றம்
புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.
ஜூலை 22-ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 27-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 28-ஆம் தேதி தீமிதி உற்சவமும் நடைபெறுகின்றன.
ஜூலை 29-ஆம் தேதி விடையாற்றி உற்சவமும், 30-ஆம் தேதி மஞ்சள் நீா் விளையாட்டும், அன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவைச் சோ்ந்த பிரேமா வீராசாமி, என்.கலியமூா்த்தி ஆகியோா் செய்துள்ளனா்.