பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான அவதூறு பதிவு: நடிகா் எஸ்.வி.சேகரின் மேல்முறையீ...
சதுரங்கப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.
விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்புகுறிச்சி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில் 11, 19 வயது பிரிவு வாரியாக மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா், இயக்குநா் என்.எஸ்.தினேஷ், முதல்வா் சுதா்சனா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். மேலும், நடைபெற உள்ள மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தனா்.