வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மலையடிகுப்பத்தில் 2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
கடலூா் ஒன்றியம், மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் ஒன்றியம், வெள்ளைக்கரை ஊராட்சியில் மலையடிக்குப்பம், வே.பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம், காட்டாரச்சாவடி கிராமங்களில் 5 தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் புதன்கிழமை இரவு போராட்டக் களத்திலேயே சமைத்து சாப்பிட்டு படுத்து தூங்கினா். இதனிடையே, வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் புதன்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆனால், விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு விவசாய சங்க தலைவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.