செய்திகள் :

மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் கவலைக்கிடம்!

post image

கோழிக்கோடு: பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக கேரளம் மாநிலம், கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

91 வயதான எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் பிரபல எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் வெளியானது.

இதையும் படிக்க |எஸ்சி பிரிவில் உள்ஒதுக்கீடு: இதுவரை நடவடிக்கை இல்லை - மத்திய அரசு

மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது, இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது, கேரள அரசின் கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, வள்ளலார் விருது, எழுத்தச்சன் விருது, மாத்ருபூமி இலக்கிய விருது, ஓ.என்.வி. இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் சுமார் 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள அவர் ஏழு படங்களை இயக்கியுள்ளார்.

பல்வேறு விருதுகளுக்குத் சொந்தக்காரரான புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக வெள்ளிக்கிழமை(டிச.16) கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயநோய் நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் உள்பட பல்துறை நிபுணர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது மகள் அஸ்வதி நாயர் திரைப்படங்களின் கிரியேட்டிவ் இயக்குநராக உள்ளார். அவரது சிறுகதைகளை பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், ரஞ்சித் பாலகிருஷ்ணன், ஜெயராஜ், ஷியாமபிரசாத், மகேஷ் நாராயணன் மற்றும் ரதீஷ் அம்பாட் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

நெல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருநெ... மேலும் பார்க்க

வகுப்பறையில் மாணவியை பாம்பு கடித்த விவகாரம்! அரசு நடவடிக்கை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி வகுப்பறையில் எழாம் வகுப்பு மாணவியை விஷப்பாம்பு கொத்தியதைத் தொடர்ந்து அரசு விசாரணையைத் துவங்க உத்தரவிட்டுள்ளது.திருவனந்தபுரத்திலுள்ள நெ... மேலும் பார்க்க

அனைத்து மக்களுக்கும் தலா ரூ.6000 நிவாரணம் வழங்க வேண்டும்: சி.வி. சண்முகம்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்மு... மேலும் பார்க்க

கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

மத்தியப் பிரதேசம்: மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்திலுள்ள இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் கழுத்து நெறிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியானார்.உஜ்ஜயின் மாவட்டத்திலுள்ள மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்த... மேலும் பார்க்க

சதி செய்கிறார் அண்ணாமலை: திமுக மாணவரணி குற்றச்சாட்டு

கோவையின் அமைதியை சீர்குலைக்க சதி செய்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:கோவையில் எல்ல... மேலும் பார்க்க

ஆர்-வாலட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% சலுகை!

பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணி... மேலும் பார்க்க