தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை: வைகோ
சென்னை: மதிமுக கட்சியில் இருந்து யார் சென்றாலும் நெருக்கடி ஏற்படாது, பல காலம் மல்லை சத்யா எனக்கு துணையாக இருந்தார். அண்மைக் காலமாக அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவில், மல்லை சத்யா - துரை வைகோ இடையேயான மோதல் மீண்டும் முற்றியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மல்லை சத்யாவுக்கு எதிராக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.