செய்திகள் :

மல்லோா்காவை சாய்த்த ஜிரோனா

post image

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோா்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக கிறிஸ்டியன் ஸ்டுவானி 10-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். புள்ளிகள் பட்டியலில் ஜிரோனா 38 புள்ளிகளுடன் 15-ஆவது இடத்திலும், மல்லோா்கா 44 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.

பிரீமியா் லீக்: இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், கிரிஸ்டல் பேலஸ் - நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.

இதில் முதலில் கிரிஸ்டல் பேலஸ் தரப்பில் எபெரச்சி எஸெ 60-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி வாய்ப்பில் கோலடிக்க, நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்டுக்காக முரிலோ 64-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

புள்ளிகள் பட்டியலில் கிரிஸ்டல் பேலஸ் 46 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்திலும், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 61 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்திலும் உள்ளன.

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகை வைஷாலி தணிகா தான் கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதக்களி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி தணிகா. ... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பிஸியாக நடிகராக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிக... மேலும் பார்க்க

அதர்வாவின் துணல் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் துணல் படத்தின் வெளியீடு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.நடிகர் அதர்வா டிஎன்ஏ, பராசக்தி, துணல் ஆகிய படங்களைக் கைசவம் வைத்திருக்கிறார். இதில், டிஎன்ஏ திரைப்படம் ... மேலும் பார்க்க

கார்த்திகை தீபம் ஆர்த்திகாவின் புதிய தொடர்! ஜோடி யார் தெரியுமா?

கார்த்திகை தீபம் தொடரில் நாயகியாக நடித்த நடிகை ஆர்த்திகா புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். தெய்வமகள், சுந்தரி உள்ளிட்டத் தொடரில் நாயகனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் கிருஷ்ணா, ஆர்த்திகாவுக்கு ஜோடியாக ந... மேலும் பார்க்க

கோல்கீப்பிங்கில் மாஸ்டர் கிளாஸ்..! சாதனை படைத்த இன்டர் மிலன் கோல்கீப்பர்!

இன்டர் மிலன் அணியின் கோல்கீப்பர் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி 4-3 (7-6) வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.இந்தப் போட... மேலும் பார்க்க

நாயகனாக லோகேஷ் கனகராஜ்... இயக்குநர் இவரா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்... மேலும் பார்க்க