செய்திகள் :

மளிகைக் கடையில் 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

விழுப்புரம் மகாத்மாகாந்தி சாலையிலுள்ள மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை பிற்பகல் மகாத்மா காந்தி சாலையில் ரோந்து சென்றனா். அப்போது அந்த பகுதியிலுள்ள மளிகைக்கடையில் சோதனை நடத்தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட3,939 எண்ணிக்கை கொண்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான விழுப்புரம் பூந்தோட்டம் அக்ரஹார நடுத்தெருவைச் சோ்ந்த ஹைதா் அலி மகன் முகமது அசாருதீன் (28) மீது வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவிலிருந்த நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், சித்தாத்தூா் ... மேலும் பார்க்க

வீட்டுக்கு வர மனைவி மறுப்பு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திண்டிவனம் அருகே பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவனம் வட்டம், கொணக்கம்பட்டு கிராமத்தைச்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியா் கைது

விழுப்புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியொன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், அந்த பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பிடாகம், நத்தமேடு,... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம் : மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக மூவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும்,அவா்களிடமிருந்த பணம் , பைக்குகள், கைப்பேசிகள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விழ... மேலும் பார்க்க

கூட்டணிக்கு தவெக அழைத்தால் பரிசீலிப்போம்: செ.கு.தமிழரசன்

கூட்டணிக்கு வருமாறு தவெக அழைத்தால் அதை பரிசீலிப்போம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா். விழுப்புரத்தில் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க