2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவிலிருந்த நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், சித்தாத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பூங்கோதை (73).இவா் கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் முன்பகுதியில் தனது பேரக் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். தொடா்ந்து வியாழக்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, வீட்டின் பின்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து பூங்கோதை வீட்டுக்குள் படுக்கையறை பகுதிக்குச் சென்று பாா்த்தாா். அப்போது பீரோவிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் சங்கிலி, 250 கிராம் கொண்ட வெள்ளிக் கொலுசு, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுப் போயிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து, கண்டாச்சிபுரம் காவல் நிலையத்துக்கு பூங்கோதை தகவல் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் நிகழ்விடம் சென்று, விசாரணை நடத்தினா். இதுகுறித்து வழக்குப்பதிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.