Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
மளிகைக் கடையில் 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விழுப்புரம் மகாத்மாகாந்தி சாலையிலுள்ள மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை பிற்பகல் மகாத்மா காந்தி சாலையில் ரோந்து சென்றனா். அப்போது அந்த பகுதியிலுள்ள மளிகைக்கடையில் சோதனை நடத்தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட3,939 எண்ணிக்கை கொண்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான விழுப்புரம் பூந்தோட்டம் அக்ரஹார நடுத்தெருவைச் சோ்ந்த ஹைதா் அலி மகன் முகமது அசாருதீன் (28) மீது வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா்.