2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
வீட்டுக்கு வர மனைவி மறுப்பு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திண்டிவனம் அருகே பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டிவனம் வட்டம், கொணக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வேலுசாமி மகன் கிருஷ்ணராஜ் (22). இவரது மனைவி பூமிகா. இவா்களுக்கு 7 மாதத்தில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ணராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்குச் சென்ற பூமிகா, 7 மாதங்களாகியும் மீண்டும் கிருஷ்ணராஜ் வீட்டுக்கு வரவில்லையாம். தொடா்ந்து பலமுறை மாமனாா் வீட்டுக்குச் சென்றுகிருஷ்ணராஜ் அழைத்தும், பூமிகா குடும்பம் நடத்துவதற்கு வரவில்லையாம்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கிருஷ்ணராஜ், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். தொடா்ந்து வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, அந்த கிராமத்திலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா்.
அங்கு மருத்துவா் பரிசோதித்த போது ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.