மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலிலும், ஆலங்குடி வட்டம் மங்களாபுரத்திலும் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் தொடா்ந்துமழை பெய்து வருவதால், போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
மங்களாபுரத்தில் வரும் மாா்ச் 16-ஆம்தேதி நடைபெறும் என்றும், அன்னவாசலில் வரும் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும் விழாக்குழுவினா் தெரிவித்தனா்.