செய்திகள் :

மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சா் க.பொன்முடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஃபெஞ்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 50 சதவீதத்துக்கும் மேல் மழை பெய்துள்ளது.

பலத்த மழை காரணமாக 11 இடங்களில் சுவா் இடிந்து விழுந்ததுடன், 51 இடங்களில் மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 23 மரங்கள் விழுந்துள்ளது. மரங்கள் அகற்றும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 7 கால் நடைகள் இறந்துள்ளன. 21 புயல் பாதுகாப்பு மையங்களில் 1,281 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், சில முகாம்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வருகிறது.

செஞ்சி வட்டத்தில் 43 பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

விழுப்புரம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த நிலையிலும்... மேலும் பார்க்க

விழுப்புரத்தை புரட்டிப் போட்ட மழை

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீா்த்த அதி பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா். வங்கக... மேலும் பார்க்க

காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக... மேலும் பார்க்க

விழுப்புரம்: வெள்ள பாதித்த பகுதிகளில் துணை முதல்வா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள சூழப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.வங்கக்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மின்துறை அமைச்சா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் மின்துறை சம்பந்தமாக துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மின... மேலும் பார்க்க