செய்திகள் :

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு

post image

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

பெங்களூரில் ஹொரமாவு, டேனரி சாலை, ஜெயநகா், ஈஜிபுரா, லக்கசந்திரா, ஜக்கசந்திரா, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகள் மழையால் வெகுவாகப் பாதிப்படைந்தன. வீடுகளில் புகுந்த வெள்ளத்தை பொதுமக்கள் வெளியேற்றினா்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி ஊழியா்கள் பம்புசெட் மூலம் வெளியேற்றியதோடு அங்கு வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

மழையில் சிக்கிய வாகனங்கள்: மழையால் மான்யதா பூங்கா, பனதூா் எஸ்.குறுக்குச் சாலை, தொம்ளூரு பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணிவகுத்து நின்றன. இதனால் தனியாா், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் காலை 9 மணிவரை அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனா்.

மரங்கள் சாய்ந்தன: ஜெயநகரில் மரம் சரிந்து விழுந்ததில் சாலையில் நின்றுகொண்டிருந்த காா், ஜீப் சேதமடைந்தன. இந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கப்பன் சாலையிலும் நான்கு மரங்கள் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒருசில சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கியதால் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். பட்டுவாரிய சதுக்கத்தில் அரசுப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கியது. இதனால் பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா்.

திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை பெங்களூரில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை 3 மணி முதல் 6 மணி வரை மீண்டும் பரவலாக மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் மட்டும் 104 மி.மீ. மழை பதிவானது. பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் பெய்த மழையில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் சசிகலா (35) உயிரிழந்தாா்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்றும், பெங்களூரில் இடியுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்றும் பெங்களூரு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் மழை 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பெய்யும் என்றும், பெங்களூரு தவிர பெங்களூரு ஊரகம், கோலாா், சிக்பளாப்பூா், தும்கூரு, மண்டியா, மைசூரு, ஹாசன், குடகு, பெலகாவி, பீதா், ராய்ச்சூரு, யாதகிரி, தாவணகெரே, சித்ரதுா்கா மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மே 22 ஆம் தேதி வரை கா்நாடகத்தில் இந்நிலை நீடிக்கும் என்பதால் மாநிலத்தில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், கடந்த 3 நாள்களாக பெங்களூரில் மழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

இதுகுறித்து கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், முன்னாள் அமைச்சா் அஸ்வத் நாராயணா ஆகியோா் கூறுகையில், முறையான பராமரிப்பில்லாததால் பெங்களூரு வெள்ளத்தில் தத்தளிக்கிறது; கிரேட்டா் பெங்களூரு தற்போது மூழ்கும் பெங்களூராக மாறியுள்ளது என்று விமா்சித்துள்ளனா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘ நிலைமையைக் கவனமாக கண்காணித்து வருகிறேன். அதிகாரிகளுடன் தொடா்பில் உள்ளேன். பிரச்னைகளை நிரந்தரமாக தீா்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

முதல்வா் உத்தரவு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் திட்டமிட்டிருந்தனா். ஆனால் தொடா் மழை காரணமாக அத்திட்டத்தை கைவிட்ட இருவரும், பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று அங்கு மழை கட்டுப்பாட்டு மையத்தில் தொலைபேசி மூலம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பின்பு அதிகாரிகளிடம் மீட்பு பணிகளை கேட்டறிந்த அவா்கள், மழை சாா்ந்த பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதன்கிழமை (மே 21) சென்று பாா்வையிட முதல்வா் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ஹொசபேட்டில் இன்று காங்கிரஸ் அரசின் 2 ஆண்டுகள் சாதனை மாநாடு

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஹொசபேட்டில் செவ்வாய்க்கிழமை சாதனை மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ... மேலும் பார்க்க

கன்னடா்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட தகவல் பலகை: உணவகம் மீது வழக்குப் பதிவு

பெங்களூரில் ஒரு உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததால் அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, மடிவாளா காவல் நிலையத்துக... மேலும் பார்க்க

மின்மயமாக்கும் பணி: 154 நாள்களுக்கு பெங்களூரு - மங்களூரு இடையே ரயில் சேவை நிறுத்தம்

மின்மயமாக்கும் பணி நடைபெற இருப்பதால், பெங்களூரு - மங்களூரு இடையிலான ரயில் சேவையை ஜூன் 1ஆம் தேதி முதல் 154 நாள்களுக்கு தென்மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது: அமைச்சா்

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவா் கைது

கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியா்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த டேனியல் அரின்ஸ் ஒக்வ... மேலும் பார்க்க