பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்: பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பார...
மஹாமிருத்யுஞ்சய ஹோமம்: இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? மார்க்கண்டேயர் சொல்லும் காரணங்கள்
மஹாமிருத்யுஞ்சய ஹோமம்: இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்! மார்க்கண்டேயர் சொல்லும் காரணங்கள்! இந்த ஹோமம் அகால மரணத்தைத் தடுக்கும்; விபத்துக்களில் இருந்து காக்கும்; எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
மிருகண்டு ரிஷி அவரது மனைவி மருத்வதி இருவரின் நீண்ட தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், அவர்கள் விரும்பிய மகப்பேறு வரத்தை அளிக்க முன்வந்தார். ஆனால் 16 வருடங்கள் மட்டுமே வாழும் ஒரு அற்புதமான ஆன்மீக ஞானியைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அறிவற்ற, சுயநலமான ஒரு நீண்ட ஆயுளைக் கொண்ட குழந்தையைப் பெறலாம் என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் ஞானியைப் பெற்றுக் கொண்டனர். மார்க்கண்டேயர் என்று பெயரிட்டு வளர்த்தனர். அவருக்கு 16 வயதானபோது யமனின் தாக்கத்தில் இருந்து ஈசனின் அருளால் மீண்டார். அப்போது அவர் உருவாக்கிய மஹாமந்திரங்களே மிருத்யுஞ்சய மந்திரம் எனப்படும்.

அந்த மந்திரங்களைக் கொண்டு செய்யப்படும் ஹோமம் மஹாமிருத்யுஞ்சய ஹோமம். இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் மார்க்கண்டேயரைப் போல மரண பயம் நீங்கி நீண்ட ஆயுளைப் பெறலாம் என்று மார்க்கண்டேயரே உறுதி அளித்துள்ளார்.
ஈசனின் அருளால் நோய் நொடிகள் நீங்கி பூரண ஆரோக்கியம் பெற்று கவலையற்ற வாழ்க்கையைப் பெறுவர் என்பதும் இந்த ஹோமத்தின் சிறப்பு.
சிவமே செல்வமே எனும்போது அவருக்கான முதன்மையான இந்த ஹோமத்தால் தரித்திரம், கடன் போன்றவை நீங்கி நவநிதியும் சேரும் என்பதும் இந்த ஹோமத்தின் சிறப்பு பலன்.

இந்த ஹோமத்துக்கு நவகிரகங்களும் கட்டுப்படும் என்பதால் சகலவிதமான தோஷங்களும் பாவங்களும் நீங்கி காரியத்தடைகள் விலகும். மங்கல காரியங்கள் விரைவாக நடைபெறும்.
இந்த ஹோமம் அகால மரணத்தைத் தடுக்கும்; விபத்துக்களில் இருந்து காக்கும்; எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும். கண் திரிஷ்டி, தீய செய்வினைகள் யாவும் விலக செய்யும்.
குறிப்பாக உடல்-மன நலப் பிரச்சினைகளை தீர்க்கும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உத்திகளை இது வழங்கும். உங்களை அதிர்ஷ்டம் மிக்கவராக, அமைதி கொண்டவராக இந்த ஹோமம் மாற்றும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு, 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்புப் பூஜையும் நடைபெற உள்ளது. பதிவு செய்யுங்கள்.
புகழ்பெற்ற இந்த சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள மேலக்கோட்டையூரில் உள்ள ஸ்ரீமேகாம்பிகை சமேத ஸ்ரீமேகநாதர் ஆலயத்தில் மாதம்தோறும் அமாவாசை நாளில் மஹாமிருத்யுஞ்சய ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. மார்க்கண்டேயரால் உருவாக்கப்பட்ட மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை முறையாக ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், காரிய வெற்றி யாவும் கிடைக்கும் என்பது உறுதி.

12 ராசிக்கும் தனித்தனியாக சிறப்பு வழிபாடுகள் செய்து பூஜைகளும் நடைபெறும் என்பதும் சிறப்பு. மேலும் உங்கள் குடும்பத்தினரும் எல்லாவிதமான பாதிப்பிலிருந்தும் காக்கப்படுகிறார்கள். மரண பயத்தை ஒழிக்கும் சக்தி இந்த ஹோமத்திற்கு உண்டு என்றும் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும் அன்பர்களுக்கும் இந்த ஹோமத்தால் உடல்நலம் மேம்பட்டு, நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்கிறார்கள்.
இங்கு பிரதோஷ நாள்களில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த மகிமை நிறைந்த தலத்தில் வரும் 26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!
QR CODE FOR MAHAMIRUTHYUNJAYA HOMAM:

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan