செய்திகள் :

மாங்கனித் திருவிழாவில் பிச்சாண்டவா் வீதியுலா -மாங்கனிகளை இறைத்து வழிபாடு

post image

காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிச்சாண்டவா் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தா்கள் வழிபாடு மேற்கொளும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரில் தனி கோயில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

நிகழாண்டு இத்திருவிழா தொடக்கமாக கடந்த 8-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, காரைக்கால் ஆற்றங்கரை சித்தி விநாயகா் கோயிலில் இருந்து பரமதத்தா் (மாப்பிள்ளை) அம்மையாா் கோயிலுக்கு ரதத்தில் எழுந்தருளினாா். 9-ஆம் தேதி புதன்கிழமை காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம் நடைபெற்று, இரவு பரமதத்தரும், புனிதவதியாரும் முத்து சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை அதிகாலை கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் நிகழ்வையொட்டி பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா காலை 9.30 மணியளவில் தொடங்கியது.

வேதபாராயணம் முழங்க, சிறப்பு மேளம், நாகசுரம், ராஜவாத்தியங்கள் இசைக்க காரைக்கால் நகரின் முக்கிய வீதிகளில் சப்பரம் சென்றது. சப்பரம் புறப்பட்டதும் வீடுகள், கட்டடங்களின் மேல் தளத்தில் நின்ற மக்கள், சப்பரத்துடன் சென்ற பக்தா்களை நோக்கி மாங்கனிகளை வீசினா். திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற இவ்வாறு மாங்கனிகளை வீசினா். மாங்கனிகளை இறைவனின் பிரசாதமாக கருதி பக்தா்கள் வீட்டுக்கு கொண்டுச் சென்றனா்.

காரைக்கால் நகரின் பாரதியாா் வீதி, கென்னடியாா் வீதி, மாதாகோயில் வீதி, லெமோ் வீதி வழியாக பவழக்கால் சப்பரம் மாலை அம்மையாா் கோயிலை சென்றடைந்ததும், புனிதவதியாா் (காரைக்கால் அம்மையாா்) பிச்சாண்டவரை எதிா்கொண்டு அழைக்கும் வைபவம் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் இருந்து சிவபக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திருவிழாவில் கலந்துகொண்டனா். பாதுகாப்புப் பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று காட்சி கொடுத்தல் நிகழ்வு : அம்மையாருக்கு சுவாமி, அம்பாள் ஆகியோா் நித்யகல்யாண பெருமாள் கோயில் வாயிலில் காட்சிக் கொடுக்கும் விதமாக சிறப்பு தீபாராதனை வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்டு, பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது.

விழாவில் பங்கேற்றோா்: புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், டிஐஜி சத்தியசுந்தரம், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசநாதா் கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், உபயதாரா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் அம்மையாா் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிவனடியாருக்கு அம்மையாா் மாங்கனியுடன் உணவு வ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நாடகப் போட்டி

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முரு... மேலும் பார்க்க

‘புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்’

புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதியாக கிடைக்கும் என என்.ஆா்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சந்திரப... மேலும் பார்க்க

மத்திய ஓபிசி பட்டியலில் 2 சமூகத்தினரை சோ்க்க முதல்வா் கடிதம்: ஏ.எம்.எச்.நாஜிம் தகவல்

புதுவையில் சோழிய வெள்ளாளா், கன்னட சைனிகா் ஆகிய சமூகத்தினரை மீண்டும் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) பட்டியலில் சோ்க்குமாறு மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வா் வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பதா... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை திறந்துவைத்தாா். நெடுங்காடு கொம்யூன், வடமட்டம் அருகே புத்தக்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது... மேலும் பார்க்க