மாசில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு!
மாசில்லாமல் போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து ஓவேலி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பெரியசூண்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், பேரூராட்சிகளின் அனைத்து நிலை பணியாளா்கள் பங்கேற்றனா். பேரணியைத் தொடா்ந்து சிறப்பு தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை சேகரித்து பாலவாடி பகுதியிலுள்ள குப்பை சேகரிப்பு மையங்களுக்குச் கொண்டு சென்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாசுபடாமல் பொங்கல் கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.