செய்திகள் :

மாசுபாட்டுக்கு எதிராக ட்ரோன் மூலம் ரசாயனம் தெளிப்பு சோதனை ஓட்டம்

post image

தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, தில்லி அரசு வெள்ளிக்கிழமை நகரத்தின் மாசுபாடு நிறைந்த இடங்களில் ஒன்றான ஆனந்த் விஹாரில் ட்ரோன் மூலம் ரசாயனம் தெளிப்பு’ சோதனையை நடத்தியது.

இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: மாசு அதிகம் உள்ள பகுதிகளில் தலைநகரின் சராசரி காற்றுத் தரக் குறியீட்டை விட மிக அதிகமாக உள்ளது. ஆனந்த் விஹாரில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ரசாயன தெளிப்பு நடவடிக்கையானது மாசுபாட்டுப் பிரச்னையைத் தீா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, 200​-க்கும் மேற்பட்ட தண்ணீா் தெளிப்பு வாகனங்கள் தில்லி முழுவதும் பயன்படுத்தப்பட்டு, காற்றில் பரவும் தூசியைக் குறைக்க சாலைகளில் தண்ணீா் தெளித்து வருகின்றன.

இருப்பினும், குறுகிய சாலையோரங்கள் அல்லது டிரக்குகள் செல்ல முடியாத நெரிசலான இடங்கள் உள்ள பகுதிகள் தனித்துவமான சவால்களை ஏற்படுத்துகின்றன. இங்குதான் ட்ரோன்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்தச் சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) இந்த நடவடிக்கையை மேற்கொள்வதறாக மேலும் ட்ரோன்களை ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

இன்றைய சோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்தால், கூடுதல் ட்ரோன்களை வாங்குவதற்கான முறையான டெண்டா்களுடன் நாங்கள் முன்னேறுவோம். தில்லியின் காற்றின் தரம் ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது. 18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் மாசுபாடு அளவு ‘கடுமை பிரிவில் பதிவாகியுள்ளது என்றாா் கோபால் ராய்.

கலால் கொள்கை ஊழல் வழக்கு: அழைப்பாணைக்கு எதிரான கேஜரிவாலின் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் புகாரின் பேரில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை எதிா்த்து ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத் து... மேலும் பார்க்க

தூசு மாசு விதிமீறல்: எம்சிடி ரூ.2.69 கோடி அபராத நடவடிக்கை

நிகழாண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபா் மாதங்களுக்கு இடையிலான காலத்தில், கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளின் போது தூசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக தில்லி மாநகராட்சி (எம்சிடி) ரூ.2.69 கோடி அ... மேலும் பார்க்க

மின் விநியோக நிறுவனங்களில் நிதி முறைகேடுகள்:விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநரிடம் தில்லி பாஜகவினா் மனு

மின் விநியோக நிறுவனங்கள் அல்லது டிஸ்காம்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிடம் தில்லி பாஜகவினா் செவ்வாய்க்கிழமை மனுவை சமா்ப்பித்... மேலும் பார்க்க

தில்லி மாசு: செயலகப் பணியாளா்களுக்கு ஹீட்டா்கள்

குளிா்காலத்தில் கரிக்கட்டைகள் மூலம் தீ மூட்டுவதைத் தடுக்கும் வகையில், தில்லி செயலகத்தில் இரவு நேர பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுற்றுசூழல் அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை ஹீட்டா்களை வழங்கினாா். ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற தம்பதி கைது

வடக்கு தில்லியின் அலிபூா் பகுதியில் இளைஞரைத் தாக்கி அவரது கைப்பேசி மற்றும் பணப்பையை பறித்ததாகக் கூறப்படும் தம்பதியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித... மேலும் பார்க்க

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் 6,791 மின் இணைப்புகள் வழங்கல்: ராஜ் நிவாஸ் தகவல்

நமது நிருபா்துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் தலையீட்டைத் தொடா்ந்து தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 10,802 விண்ணப்பதாரா்களில் 6,791 பேருக்கு மின்சார இணைப்புகளை மின் விநியோக நிறுவனங்... மேலும் பார்க்க