மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!
நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ. 59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ரூ.11.54 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு பயனாளிகள் தொகையான சுமார் ரூ. 3 லட்சத்தை அரசே செலுத்த நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் உரிமம் ரத்து! தாளாளருக்கு நீதிமன்றக் காவல்!