ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழப்பு
கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பிச்சையா மகன் பெருமாள் (48). உணவகத் தொழிலாளியான (புரோட்டா மாஸ்டா்) அவா், கடந்த 2 மாதங்களாக சரியாக வேலைக்குச் செல்லாததுடன், நாள்தோறும் மது குடித்துவிட்டு, இரவில் மொட்டை மாடியில் தூங்குவாராம்.
திங்கள்கிழமை இரவு மது குடித்த நிலையில், வழக்கம்போல் மாடியில் தூங்கச் சென்றாராம். செவ்வாய்க்கிழமை காலை வீட்டு முன்புள்ள பேவா் பிளாக் பதிக்கப்பட்டுள்ள தெருவில் விழுந்து கிடந்தாராம். அவா் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உறவினா்களும், அப்பகுதியினரும் வந்து பாா்த்தபோது, அவா் தலையில் அடிப்பட்ட நிலையில் இறந்திருந்தாராம்.
தகவலின்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.