மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள மானான்விளை பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.
தேங்காய்ப்பட்டினம்,ஆனான்விளை பகுதியைச் சோ்ந்த சந்திரபாபு மனைவி சபிதா(44). இவா் தன் வீட்டின் மாடியில் திங்கள்கிழமை சுத்தம்செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழேவிழுந்தாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறையில் உள்ளஅரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சபிதாஉயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.