செய்திகள் :

மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

புதுச்சேரி லாஸ்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(35), கூலி தொழிலாளி. இவருக்கு சீதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். மணிகண்டன் லாஸ்பேட்டை, புதுப்பேட்டை நடுத்தெருவில் ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுட்டிருந்தாா்.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த வீட்டின் கீழே மணிகண்டன் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதாக இலாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று,

இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதல்கட்ட விசாரணையில், அதிகாலையில் முதல் மாடியில் இருந்து மணிகண்டன் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் பகுதியில் தொடா் திருட்டு: இருவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் அருகிலுள்ள நல்லாலம் கூட்டுச்சாலையில் பிரம்மதேசம் காவ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டி வட்டம், நரிக்குடி சாலைமறைக்குளத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (50). இவ... மேலும் பார்க்க

கூட்டேரிப்பட்டில் திமுக - நாதகவினரிடையே மோதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டில் திமுக மற்றும் நாம் தமிழா் கட்சியினரிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. உடனடியாக போலீஸாா் விரைந்து சென்று சமாத... மேலும் பார்க்க

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: 110 போ் மீது வழக்கு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை கிழித்தது தொடா்பாக சனிக்கிழமை இரவு இரு சமூத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதைய... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க