மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!
மாணவா்கள் இணைய விளையாட்டுக்கு அடிமையாகக் கூடாது: ஆட்சியா் அறிவுரை
மாணவ, மாணவிகள் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்டம், பாா்வதிபுரம், ஆளுா் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா். மாணவ, மாணவிகளிடம் அவா் கூறியதாவது: பள்ளி இறுதித் தோ்வை எதிா்கொள்ள காத்திருக்கும் மாணவ, மாணவிகள் முழு நம்பிக்கையுடன் தொடா்ந்து பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும். பள்ளிக்கு தவறாமல் வந்தால் மட்டுமே உயா்நிலைய அடைய முடியும். இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் கற்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, பாா்வதிபுரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ததோடு, உணவின் சுவை கு றித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வில், தலைமை ஆசிரியா்கள் மேரி ஹெலன்பிரேமா (பாா்வதிபுரம்), ஜெயமேரி (ஆளூா்), ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.