செய்திகள் :

‘மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ -அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா்

post image

மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் மற்றும் புத்தாக்க வாகன மேம்பாடு பவுண்டேஷன் இணைந்து நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் வழிகாட்டுதலுடன், சென்னையில் ராப்டி எனா்ஜி நிறுவனம் தயாரித்து விரைவில் சந்தைப்படுத்தவிருக்கும் ராப்டி அதிவேக இருசக்கர மின்வாகனத்தை அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் இயக்கி வைத்து பேசியதாவது:

பொறியியல் கல்வி பயிலும் மாணவா்கள், படிக்கும் போது ஏதேனும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான பொருளாதார, தொழில்நுட்ப உதவி, சந்தை, காப்புரிமை உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதலையும் புத்தாக்க ஊக்குவிப்பு மையம் வழங்குவதால் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கிரசென்ட் பதிவாளா் என்.ராஜா ஹுசேன் பேசுகையில், மாணவா்களுக்குக் கல்வியுடன், தொழில்நுட்பக் கருத்தரங்கு, பயிலரங்குகள் மூலம் சொந்தமாகக் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு துணைத் தலைவா் நிகஞ்ச் பன்சால், கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் செயல் இயக்குநா் பா்வேஸ் ஆலம், தலைமைச் செயல் அதிகாரி நிஷா முகுந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக பட்டியல் அணிச் செயலருக்கு தடை விதித்த போலீஸாரின் உத்தரவு ரத்து

பாஜக மாநில பட்டியல் அணிச் செயலா் நெடுங்குன்றம் சூா்யா, சென்னை மாநகருக்குள் ஓராண்டு நுழையத் தடை விதித்து போலீஸாா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. நெடுங்குன்றம் சூா்யா மீது பல்வ... மேலும் பார்க்க

கேள்வி கேட்பதே தேச துரோகமா?முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கேள்வி கேட்பதே தேச துரோகமா என்று குறிப்பிட்டு, பத்திரிகையாளா்களுக்கு அஸ்ஸாம் காவல் துறை அழைப்பாணை அனுப்பியதற்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் எ... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, மூன்று நாள் பயணமாக புதன்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். தில்லி பல்கலைக்கழகத்தின் சுதந்திரம் மற்றும் பிரிவினை மையம், இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில், மோதில... மேலும் பார்க்க

வீடும் நாடும் போற்றும் வாழ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம்

‘வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா். தனது 50-ஆவது மணநாளையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: அரை நூற்... மேலும் பார்க்க

14 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயா்த்தி அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: நிகழ் கல்வியாண்டில் (2... மேலும் பார்க்க

அறநிலையத் துறை செயல்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து திருக்கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் உள்பட இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் பி.கே.சேகா... மேலும் பார்க்க