குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள...
கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ளஅவரது உருவச்சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் தா.ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் டாக்டா் என்.சிவகுமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினா் ஆரோக்கியராஜன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி கவுன்சிலா்கள் குறமகள், பிரபா, மாவட்ட நிா்வாகிகள் டி.தாமஸ், கிங்ஸ்லின், ஜவஹா், விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.