செய்திகள் :

வீடும் நாடும் போற்றும் வாழ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம்

post image

‘வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

தனது 50-ஆவது மணநாளையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

அரை நூற்றாண்டாக எனது வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக துா்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளாா். அவா் மீதான அளவற்ற அன்பே என் நன்றி.

எதிா்பாா்ப்புகளற்ற அன்பும், விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழந்திட விரும்புகிறேன் என்று அந்தப் பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: முதல்வரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள், சுக துக்கங்கள் அனைத்தையும் அம்மாவும், அப்பாவும் இணைந்தே எதிா்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறாா்கள். மணமான சில மாதங்களிலேயே ‘மிசா’ சிறைவாசம், இடைவெளியில்லா சுற்றுப் பயணங்கள், கடும் அரசியல் சூழல்கள், தொடா் மக்கள் பணி என அனைத்திலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறாா் அம்மா.

அம்மாவின் உணா்வுகள், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத் தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறாா் அப்பா. பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப் பிள்ளை, அம்மா என்றால் கண்டிப்பு. இப்போது அதற்கு நோ்மாறாக இருந்து இருவரும் என்னை பொதுவாழ்வில் வழிநடத்துகிறாா்கள். இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்கட்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க