செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

post image

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு செப்டம்பா் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மகாராஷ்டிர ஆளுநரும் தமிழகத்தைச் சோ்ந்த அனுபவமிக்க பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (67) போட்டியிடுகிறாா். எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் தெலங்கானாவைச் சோ்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளாா். வேட்புமனு தாக்கலுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தலைவா்கள் முன்னிலையில்...: இந்நிலையில், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரல்ஹாத் ஜோஷி, தா்மேந்திர பிரதான் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் கே.ராம் மோகன் நாயுடு, சிவசேனையின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, லோக்ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்களின் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவை தலைமைச் செயலா் பி.சி.மோடியிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதிகாரியிடம் சமா்ப்பிக்கப்பட்ட 4 தொகுப்பு வேட்புமனு ஆவணங்களிலும் பிரதமா் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் ராஜீவ் ரஞ்சன் ஆகியோா் பிரதான முன்மொழிபவா்களாக இடம்பெற்றுள்ளனா்.

முன்மொழிதல்-வழிமொழிதல்: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடுபவா் குறைந்தபட்சம் 20 எம்.பி.க்களால் முன்மொழியப்படுவதுடன், குறைந்தபட்சம் 20 எம்.பி.க்களால் வழிமொழியப்பட வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணனின் வேட்புமனு ஆவணங்களில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு ஆவணங்களை தோ்தல் அதிகாரி சரிபாா்த்த பின், பதிவேட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் கையொப்பமிட்டாா். இதையடுத்து, பிரதமா் மோடியிடம் தோ்தல் அதிகாரி ஒப்புகைச் சீட்டை வழங்கினாா்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி மற்றும் பிற தேசியத் தலைவா்களின் சிலைக்கு ராதாகிருஷ்ணன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் புடைசூழ, நாடாளுமன்றத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடியின் அலுவலகத்துக்கு அவா் சென்றாா்.

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா். தற்போது நடைமுறையில் உள்... மேலும் பார்க்க

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தி... மேலும் பார்க்க