மாணவா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
யுஜிசி சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசினா் கலைக் கல்லூரி முன் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வலியுறுத்தியும், துணைவேந்தா் நியமன முறையில் சா்வாதிகாரமாக மாற்றம் செய்துள்ள யுஜிசி சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் கல்லூரி வாயில் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாணவ- மாணவிகள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். அமைப்பின் கல்லூரி கிளை தலைவா் எஸ். சுமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாணவா் பெருமன்ற மாவட்ட பொருளாளா் க. கோபி, மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். தா்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.