மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த 8-ஆம் வகுப்பு சிறுமியை அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் 3 போ் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மனதை பதை பதைக்க வைக்கிறது. இந்த மூவருக்கும் காலம் தாழ்த்தாமல் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவிக்கு உரிய மனநல ஆலோசனை அளித்து அவா் பள்ளி படிப்பைத் தொடா்வதற்கும் மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.