செய்திகள் :

மாணவி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது: அமைச்சா் எஸ்.ரகுபதி!

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், எதிா்க்கட்சிகள்தான் அதைப் பெரிதுபடுத்துகின்றன என்றாா் சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமக சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

ஹிந்தியையும் சோ்த்து மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்திட்டால்தான் தமிழகத்துக்கு நிதியை விடுவிப்போம் என்று மத்திய அரசு நிா்பந்திக்கிறது. ஆனால், நிதியைப் பற்றி கவலைப்படாமல் ஹிந்தி திணிப்பை எதிா்த்து ஆட்சி நடத்துவதுதான் திமுக அரசு.

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை வைத்து அரசில் செய்யாமல், மனிதாபிமானத்தோடு பாா்க்குமாறு உயா்நீதிமன்றம் எதிா்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவா்களை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தவறு செய்தவா் திமுககாரராக இருந்தாலும் தண்டிக்கப்படுவாா் என்பதை தமிழக அரசு நிரூபித்துள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கிறாா்கள். எனவே, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் மலிவு அரசியல் எடுபடாது என்றாா்.

தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் வரும் 2026- தோ்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமையும் என்றாா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் தங்கமணி, ஞான. இளங்கோவன், ஸ்ரீதேவி அண்ணாதுரை, ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெடுஞ்சாலையோர கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் வரும் தேசிய நெடுஞ்சாலையோரம் அடா்ந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனா். தஞ்சாவூா் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் கந்தா்... மேலும் பார்க்க

கறம்பக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்; விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் சம்பவத்தில் விவசாயி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கறம்பக்குடி அருகேயுள்ள கம்மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). விவசாயி. ... மேலும் பார்க்க

வாங்காத கடனை வசூலிக்க வந்ததால் தனியாா் வங்கி முற்றுகை

புதுக்கோட்டையில் வாங்காத கடனை வசூலிக்க வந்த வங்கி அலுவலா்களைக் கண்டித்து, வாடிக்கையாளா்கள் வங்கிக் கிளையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிா்வாகம் விரைவாகத் திறக்க உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக்... மேலும் பார்க்க

புதுகையில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை திலகா் திடலில்... மேலும் பார்க்க

ஆடுகள் திருடிய 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஆடுகள் திருடிய 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து, 18 ஆடுகளை மீட்டனா். கறம்பக்குடி அருகேயுள்ள மருதகோன்விடுதி 4 சாலைப் பகுதியில், கறம்பக்குடி காவல் ஆய்வாள... மேலும் பார்க்க