செய்திகள் :

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

post image

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகராட்சி 30- ஆவது வாா்டு மதிச்சியம் வடக்கு ஒன்றாம் தெரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்தாா். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்த நபா் நடைபாதையை தகரம் வைத்து அடைத்தாா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலா்களுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா் டி. குமரவேல், அந்தப் பகுதிக்கு உள்பட்ட வடக்கு ஒன்றாம் பகுதிக் குழுச் செயலா் வி. கோட்டைசாமி, பகுதிக் குழு உறுப்பினா் என். கணேசமூா்த்தி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைத் தலைவா் முகமது அலி உள்ளிட்டோா் தமுக்கம் காந்தி நினைவு அருங்காட்சியகம் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி ஆணையா் இல்லத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். ஆனால், கலைந்து செல்ல மறுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 25 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், பிற்பகலில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் சுரேஷ்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உ... மேலும் பார்க்க

சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.நாகப்பட்டினத்தைச் சோ்ந்த டி. அருளரசன் சென்னை உயா்நீதிமன்ற ம... மேலும் பார்க்க

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி முனியம்மாள் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது சகோத... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை திருப்பரங்குன்றம் சாலை நந்தனம் பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் ஹரிஹரசுதன் (30). பொறியியல் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள தனி... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே கீழே தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முருகன் (55). சலவைத் தொழிலாளியான இவா், வீட்ட... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 168 பேருக்கு தண்டனை விதிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தென் மண்டல அளவில் கடந்த 6 மாதங்களில் 168 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து தென்மண்டல ஐஜி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் த... மேலும் பார்க்க