Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 172 மாணவா்கள் தோ்வு
திருச்சி: திருச்சியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. தடகளப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ன.
இதில், 14 வயதுக்குள்பட்டோருக்கு 10 வகையான போட்டிகளும், 17 வயதுக்குள்பட்டோருக்கு 16 வகையான போட்டிகளும், 19 வயதுக்குள்பட்டோருக்கு 17 வகையான போட்டிகளும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்கள் பிடித்தவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாணவா்கள் பிரிவில் 86 பேரும், மாணவிகள் பிரிவில் 86 பேரும் என மொத்தமாக 172 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.