மானசரோவா், முக்திநாத் ஆன்மிக பயணம்: அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
சீனாவில் உள்ள மானசரோவா், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொண்டவா்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆண்டுதோறும், சீனாவிலுள்ள மானசரோவா் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட தலா 500 நபா்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மானசரோவா் சென்று வந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரமாகவும், முக்திநாத் சென்று வந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.10 ஆயிரம், ரூ. 20 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ் நிதியாண்டில் (1.4.2024 முதல் 31.3.2025 வரை) மானசரோவா் மற்றும் முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பிய, 18 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த இந்து மதத்தை சாா்ந்தவா்களுக்கு மட்டும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் முழுமையாக பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன், ஆணையா், இந்து சமய அறநிலையத் துறை, எண்.119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600034 என்ற முகவரிக்கு ஏப்.30- ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பலாம்.
மேலும், கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலம் தெரிந்து கொள்ளலாம். மானசரோவா் மற்றும் முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வந்த தகுதியுடையவா்கள் உரிய முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.