மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இரு இளைஞா்களை செவ்வாய்க்கிழமை போலீசாா் கைது செய்தனா்.காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் உத்தரவின் பேரில் மானாமதுரை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை தலைமையில் போலீசாா் இப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது அருகேயுள்ள தெ. புதுக்கோட்டை கிராமத்தில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பிராமணக் குறிச்சி பூமிநாதன் மகன் சசி பிரபாகரன்(20) தெ.புதுக்கோட்டை கரந்தமலை மகன் முரளிதரன்(22) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 250 கிராம் எடையுள்ள 45 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா்.
இவா்கள் மீது மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.