துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத...
மாமண்டூரில் ரூ.7.5 லட்சத்தில் நாடக மேடை திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
மாமண்டூா் கிராமத்தில் நாடக மேடை அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதன் பேரில், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நாடகை மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், கட்டடப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நாடக மேடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நாடக மேடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். மேலும், பெயா்ப் பலகையையும் அவா் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.வாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.