மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா
போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவையொட்டி மேல்நந்தியம்பாடியைச் சோ்ந்த சம்பத் மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தினாா்.
இதில் விநாயகா் வியாசா் பெருமை, கருடன் பிறப்பு, பீஷ்மா் பிறப்பு, குந்தி பிறப்பு, கிருஷ்ணா் பிறப்பு, அரக்கு மாலிகை, பகாசூரன் வதை, வில் வளைப்பு, தபசு, அரவாண் களப் பலி என பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை படுகளம், மாலையில் தீ மிதி விழா நடைபெற்றது.
இதில் மாம்பட்டு, ஜடதாரிகுப்பம், கொல்லைமேடு, எழுவாம்பாடி, பேட்டை, திருசூா், அத்திமூா், ராமாபுரம், போளூா் என சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.