செய்திகள் :

மாரம்பாடி பெரிய அந்தோணியாா் ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

முந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரம்பாடி புனித பெரிய அந்தோணியாா் ஆலய பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி புனித பெரிய அந்தோணியாா் ஆலயப் பெருவிழா ஆண்டுதோறும் தை மாதம் முதல் வாரத்தில் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவுக்கு வேடசந்தூா், திண்டுக்கல் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமன்றி வெளியிடங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோா் வந்து வழிபாடு நடத்துகின்றனா். அந்த வகையில் நிகழாண்டுக்கான பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி பெரிய அந்தோணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயக் கொடி மரத்தில் இரவு 10 மணிக்கு ஏற்றப்பட்டது. பிறகு, மாரம்பாடி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஊா் முக்கிய பிரமுகா்களுக்கு மாலை சந்தனம், வெற்றிலைப் பாக்கு வழங்கி அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மதுரை மறைமாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மறை மாவட்ட ஆயா் தாமஸ்பால்சாமி, மறை வட்ட முதன்மை குருவும், மாரம்பாடி திருத்தல பங்குத்தந்தையுமான சுரேஷ் சகாயராஜ், உதவி பங்குத் தந்தை அமல்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 5, 8, முற்பகல் 11, பிற்பகல் 3, 4, மாலை 6 மணி என 6 வேளை திருப்பலி நடத்தப்பட்டது.

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா் விடுமுறையையொட்டி தினமும் திரளான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்க... மேலும் பார்க்க

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பழனியில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் விநாயகருக்கு பால், பஞ்சாமிா்தம், தயிா், பன்னீா், இளநீா்... மேலும் பார்க்க

விசிக நிா்வாகி கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது

திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், தலைமறைவான மற்றொருவா் குறித்து விசாரித்தனா். திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட... மேலும் பார்க்க

கால்பந்து தொடா்: 2ஆவது ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி

திண்டுக்கல்லில் நடைபெற்ற பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்து தொடா் 2-ஆவது போட்டியில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. அகில இந்திய கால்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கால்பந்து கழகம், திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனி கோயில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவினா் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அண்மையில் அறங்காவலா் குழு உறுப்பினா்களை நியமனம் செய்து தமிழக அர... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்த தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையப் ப... மேலும் பார்க்க