அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை
மாரீசன் விழிப்புணர்வான படம்: வடிவேலு
நடிகர் வடிவேலு மாரீசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான திரைப்படம் மாரீசன். ஞாபக மறதி நோயாளியான வடிவேலு, திருடனான ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான பயணமாக கதை உருவாகியிருக்கிறது.
இப்படம் நாளை (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு, “மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குநரிடம், கதைக்கும் தலைப்புக்குமான காரணம் என்ன எனக் கேட்டபோது, ராமாயணத்துக்கும் இப்படத்தின் கதைக்குமான தொடர்பைக் குறித்துச் சொன்னது நன்றாக இருந்தது.
மாமன்னனுக்குப் பிறகு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததுடன் அவர் என்னுடைய ரசிகர் என்பது கூடுதல் மனநிறைவைக் கொடுக்கிறது. மாரீசன் திரைப்படம் சமூக விழிப்புணர்வைப் பேசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கான படம் என்பதைத் தாண்டி அனைவரும் மாரீசனை ஏற்றுக்கொள்வார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டுத் தேதி!