செய்திகள் :

மார்ஷுக்கு காயமா? 5ஆவது பந்துவீச்சாளர் யார்? ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் பேட்டி!

post image

மிட்செல் ஸ்டார்க் காயம், மிட்செல் மார்ஷ் ஒழுங்காக பந்துவீசுவதில்லை என்ற நிலையில் அடுத்த போட்டியில் ஆஸி அணியில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து அதன் தலைமைப் பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸி. 2-1 என முன்னிலை வகிக்கிறது. மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே போடியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசி, 5ஆவது போட்டி ஜன.3ஆம் தேதி தொடங்குகிறது. மிட்செல் ஸ்டார்க் காயத்தினால் அவதியுறுகிறார். ஆனாலும் 16 ஓவர்கள் வீசி விராட் கோலி விக்கெட்டினை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணியில் ஜாய் ரிச்சர்ட்சன், ஷான் அப்பாட், ஆல் ரவுண்டர் வெப்ஸ்டர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன.

மிட்செல் மார்ஷ் பேட்டிங்கிலும் அசத்தவில்லை. பந்துவீச்சிலும் அதிகமாக பங்களிக்கவில்லை.

இந்த நிலையில் இது குறித்து ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது:

மார்ஷ் விளையாடுவாரா?

மிட்செல் மார்ஷுக்கு காயம் இல்லை. இதில் மனிதர்கள் மிக அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள் என நினைக்கிறேன். நாங்கள் நினைத்ததுபோல மார்ஷ் அதிகமாக பந்துவீச எங்களுக்கு தேவைப்படவில்லை. அவர் இன்று மீண்டும் பந்துவீசினார். 120 கி.மீ./மணி வேகத்தில் வீசினார். அவருக்கு காயம் ஏதுமில்லை.

பந்துவீசும் காரணத்தினால் அவரை அணுகுவது தவறு என நினைக்கிறேன். எந்தக் காரணத்தினாலும் அவர் எங்களுக்கு தேவைப்படவில்லை என்பதே எங்களது நிலைப்பாடு. அது ஒரு தந்திரமான செயல்பாடாக வைத்திருக்கிறோம். இந்தத் தொடரில் நாங்கள் வீசிய ஓவர்கள் எங்களுக்கு பலனளிக்கும்.

இந்தத் தொடர் முழுவதும் பௌலிங், பேட்டிங் இரண்டும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் இரண்டும் சரியாக அமையுமென எதிர்பார்க்கிறேன். அதனால் 5ஆவது பந்துவீச்சாளர் தேவையா என்றால் ஆமாம். ஆனால், 5ஆவது பந்துவீச்சாளருக்காக அதிக தேவை வித்தித்தால், அது தற்போது இல்லை.

புதிய பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்படுமா?

மிட்செல் மார்ஷ் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கும் அவரே எதிர்பார்த்த அளவுக்கும் 4 போட்டிகளில் பேட்டிங் விளையாடவில்லை. அவர் மீண்டு வருவாரென நம்புகிறேன். நாங்கள் போட்டியை வென்றுவிட்டோம். அவரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்.

ஜாய் ரிச்சர்ட்சன் பிபிஎல் போட்டியில் விளையாடுகிறார். புதன்கிழமை அணிக்கு திரும்புகிறார். அவர்மீது நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால் அவரை பிபிஎல் விளையாட அனுமதித்திருக்க மாட்டோம். கடந்த வாரம் வலைப் பயிற்சியில் மிகுந்த வேலையை பகிர்ந்துகொண்டார். தேவைப்பட்டால் 40 ஓவர்கள் வீசவும் தயார்.

ஷான் அப்பாட்டும் இருக்கிறார். தேவைப்பட்டால் அவரும் விளையாடுவார். எங்களது வேகப் பந்து வீச்சாளர்களை ஆராய்ந்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவ... மேலும் பார்க்க

காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்

எந்த ஒரு காரணமுல் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சி... மேலும் பார்க்க

“சூப்பர் ஸ்டார் கலாசாரம்...” விராட் கோலியை சரமாரியாக விளாசும் முன்னாள் இந்திய வீரர்!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைப... மேலும் பார்க்க

கோப்பையை வழங்க அழைக்கவில்லை; சுனில் கவாஸ்கர் அதிருப்தி!

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்க தன்னை அழைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சி... மேலும் பார்க்க