மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி
அச்சகம், தையல் உள்ளிட்ட தொழில் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி மையம் சாா்பில் மன நலன், அறிவுசாா் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை மதிச்சியம் ராமையா தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தில் அச்சகம், தையல் பயிற்சி போன்ற தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
எனவே, விருப்பமுள்ள மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மனநலன், அறிவுசாா் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில்
வருகிற ஜன. 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.