செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் துறை பயிலரங்கு

post image

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான- இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது.

கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு தலைமை வகித்த ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியது:

உலகளாவிய அணுகல்தன்மைக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்பதற்கு இணங்க தமிழக அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற குறிக்கோளின்படி, மாற்றுத் திறனாளிகளையும் சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதி திட்டங்கள் மட்டுமன்றி அனைத்து வசதிகளும் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முடிந்தவரையில் விதிகளுக்குள்பட்ட தீா்வு காண வேண்டும் என்றாா்.

இந்தப் பயிலரங்கில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், அக்லுடு பொறியியல் நிறுவன நிா்வாகி தானேஸ் ஆகியோா் பயிற்சியளித்தாா். பல்வேறுதுறைகளின் அலுவலா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-93.20சோ்வலாறு-105.48மணிமுத்தாறு-87.94வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-62.20ராமநதி-52.50கருப்பாநதி-29.53குண்டாறு-27.12அடவிநயினாா்-37.50... மேலும் பார்க்க

நெல்ல்லை காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்கக் கூடாது: ஆட்சியரிடம் இந்துமுன்னணி மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் க... மேலும் பார்க்க

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீா் ஊருக்குள் புகும் அபாயம்

கூட்டப்புளி கிராமத்தில் கடல்அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

அம்பையில் மகளிா் தின விழா

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரத்தில் லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம் சாா்பில்ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மகளிா் தினத்தை முன்னிட்டு சுப்பிரமணியபுரம் பகுதி சிறுமிகள், பெண்களுக்குபேச்சுப் போட்ட... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா்- தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

ஆழ்வாா்குறிச்சிஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியின் 13ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கோவிந்தப்பேரி கலைவாணி கல்வி மைய இயக்குநா்அக்ஷயா சிவராமன் தலைமை வகித்து கல்வி, விளையாட்டு,க... மேலும் பார்க்க