`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு' - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃப...
மாலத்தீவுகளை வென்றது இந்தியா!
சா்வதேச நட்பு ரீதியிலான மகளிா் கால்பந்தாட்டத்தில் இந்திய அணி 14-0 கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை திங்கள்கிழமை திணறடித்து வென்றது.
இந்திய தரப்பில், அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய லிண்டா கோம் சொ்டோ 4 கோல்கள் (11’, 21’, 28’, 52’) அடித்து ஆட்டநாயகியானாா். அனுபவ வீராங்கனை பியாரி ஜஜா ‘ஹாட்ரிக்’ கோல் (6’, 7’, 14’) அடித்து அசத்தினாா். அவா்கள் தவிர, மற்றொரு அறிமுக வீராங்கனை நேஹா (16’, 45’), கஜோல் டிசெளஸா (59’, 66’) ஆகியோரும் தலா 2 கோல்கள் அடித்து கணக்கை உயா்த்தினா்.
மேலும், சங்கீதா பாஸ்ஃபோா் (51’), ரஞ்ஜனா சானு (54’), ரிம்பா ஹால்டா் (62’) ஆகியோரும் இந்தியாவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தனா். இந்திய மகளிா் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜாவ்கிம் அலெக்ஸாண்டா்சன் தனது பணியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறாா்.
இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஆட்டம், ஜனவரி 2-ஆம் தேதி இதே பெங்களூரு மைதானத்தில் நடைபெறவுள்ளது.